இந்த மாதம் 19-ஆம் தேதியன்று, ஏர்பஸ் ஏ-320 நியோ ரக ஏர் இந்தியா விமானம் பெங்களூர் செல்வதற்காக மும்பை விமான நிலையத்தில் இருந்து கிளம்பியது. அதன் பின், பறக்கத் தொடங்கிய 27 நிமிடங்களில், திடீரென அந்த விமானத்தின் இன்ஜின் பழுதடைந்ததால் பாதியிலேயே நின்றுவிட்டது.
இதனால் அந்த விமானத்தின் ஒரு எஞ்சின் வேலை செய்யாததால், அதன் நிலைமையை விமானி சுதாரித்தார். இதையடுத்து விமானத்தை பாதுகாப்பாக மும்பை விமான நிலையத்திலேயே தரையிறக்கி, மிகவும் பாதுகாப்பாக ஒரு இன்ஜின் உதவியுடன் மும்பைக்கு திரும்பி வந்து தரையிறங்கியது. மேலும் கடந்த 2-மாதங்களில் இதுபோன்ற சம்பவங்கள் 3-முறை நடுவானில் நிகழ்ந்துள்ளது. இந்த மாதிரியான விமான இன்ஜின் கோளாறு தொடர்பான பிரச்சனைகள் குறித்து, மத்திய சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை இயக்குநரகம் (டி ஜி சி ஏ) விசாரணையை தொடங்கியுள்ளது.
இந்த நிலையில் சிஎப்எம் இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட விமானங்களில் தான் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மேலும் சிஎப்எம் இன்டர்நேஷனல் லீப் என்ற இன்ஜின் என்பது சிஎப்எம் இன்டர்நேஷனல் மூலம் தயாரிக்கப்பட்ட உயர்-பைபாஸ் டர்போ பேன் ஆகும்.
இந்நிலையில் இத்தகைய இன்ஜின் கோளாறானது ஏர் இந்தியாவிற்கு சொந்தமான 2 ஏர்பஸ் – ஏ32 நியோ ஜெட் விமானங்கள் மற்றும் ஸ்பைஸ் ஜெட்டுக்கு சொந்தமான ஒரு போயிங் – 737 மேக்ஸ் விமானம் என மொத்தம் 3 விமானங்களில் ஏற்பட்டுள்ளது. இதனால் நடுவானில் விமானிகள், 2 என்ஜின்களில், 1 இன்ஜின் மூலம் விமானங்களை பத்திரமாக தரையிறக்கியுள்ளனர்.