Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது அறுந்து விழுந்த உயர் அழுத்த மின்கம்பி”…. அச்சமடைந்த பயணிகள்….!!!!!!

கோவையை நோக்கி சென்ற இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் மீது திடீரென உயர் அழுத்த மின்கம்பி காட்பாடி அருகே அறுந்து விழுந்தது.

சென்னையிலிருந்து கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி அடுத்திருக்கும் சேவூர் அருகே நேற்று மாலை 4:30 மணி அளவில் வந்து கொண்டு இருந்த பொழுது திடீரென ரயிலை இயக்க பயன்படுத்தும் உயர் அழுத்த மின் கம்பி திடீரென அறுந்து ரயில் மீது விழுந்தது. உயர் அழுத்தம் மின் கம்பி விழுந்ததால் மின்சாரம் தானாகவே துண்டிக்கப்பட்டது.

இதனால் ரயிலானது சேவூரிலேயே நிறுத்தப்பட்டது. பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் இன்ஜினியர்கள் அறுந்து கிடந்த மின் கம்பியை சரி செய்யும் பணியில் ஈடுபட்டார்கள். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு மின் கம்பி சரி செய்யப்பட்டது. இதை அடுத்து இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலானது கோவையை நோக்கி புறப்பட்டு சென்றது. இதனால் பின்னால் வந்த திருவனந்தபுரம், லால்பாக், மங்களூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டது. பின் மின் கம்பி சரி செய்யப்பட்ட பிறகு ஒன்றன்பின் ஒன்றாக புறப்பட்டு சென்றது.

Categories

Tech |