கோவையிலிருந்து சென்னை போகும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சாமல்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல துவங்கியது. இதனை முன்னிட்டு தி.மு.க. சார்பாக மாவட்ட பொறுப்பாளர் செங்குட்டுவன் தலைமையில் நிர்வாகிகள் ரயிலுக்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் வரவேற்பு அளித்தனர்.
இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் எக்கூர் செல்வம், மூன்றம்பட்டி குமரேசன், நரசிம்மன் வசந்த அரசு, ரஜினி செல்வம், பேரூர் செயலாளர் பாபு சிவக்குமார், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும், மாநில மகளிர் ஆணைய உறுப்பினருமான டாக்டர் மாலதி நாராயணசாமி, ஊத்தங்கரை, மத்தூர் ஒன்றியத்தை சேர்ந்த நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு ரயிலை மலர் தூவி வரவேற்றனர்.