ஜொமோட்டோ புதியதாக “இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ்” (Intercity legends) என்ற புது சேவையைத் துவங்கியுள்ளது. இச்சேவையானது நகரங்களுக்கு இடையிலான உணவு விநியோக சேவையை வழங்க இருக்கிறது. அதன்படி கொல்கத்தாவின் தனித்துவ அடையாளமான ரசகுல்லாவையும், ஹைதராபாத்தின் பேமஸ் உணவான பிரியாணியையும் நீங்கள் சென்னையிலிருந்தே ஆர்டர் செய்து பெறமுடியும். இந்தியாவின் மற்ற நகரங்களிலுள்ள பிரபல உணவகங்களிலிருந்து ஸ்பெஷல் உணவுகளை ஆர்டர்செய்ய முடியும்.
எனினும் இன்று ஆர்டர் செய்தால் அதிகபட்சம் ஒரு நாளுக்குள் உணவு டெலிவரி செய்யப்படும். இதனிடையில் பெரும்பாலும் பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை டெலிவரி செய்யப்படும் என ஜொமோட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தன் வலைதளபக்கத்தில், “கொல்கத்தாவிலிருந்து ரசகுல்லா, ஹைதராபாத்திலிருந்து பிரியாணி, பெங்களூரிலிருந்து மைசூர்பாக், லக்னோவிலிருந்து கபாப், டெல்லியிலிருந்து பட்டர் சிக்கன் ஆகிய தனித்தன்மை கொண்ட உணவுகளை வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்து ருசிக்க இன்டர்சிட்டி லெஜெண்ட்ஸ் திட்டம் உதவும்” என தெரிவித்துள்ளார்.
தற்போதைக்கு குர்கான் மற்றும் தெற்கு டெல்லியில் வசிப்பவர்களுக்கு மட்டுமே இச்சேவையை பெற முடியும். பின் இதற்கு கிடைக்கக்கூடிய வரவேற்பை தொடர்ந்து விரைவில் நாடு முழுதும் இச்சேவையை விரிவுபடுத்த ஜொமோட்டோ திட்டமிட்டு உள்ளது. குர்கான் மற்றும் தெற்கு டெல்லியில் வசிப்பவர்கள் ஆர்டர்செய்ய வேண்டிய நகரங்களின் பட்டியலில் கொல்கத்தா, ஹைதராபாத், லக்னோ, ஜெய்ப்பூர், பெங்களூர், மதுரா, சென்னை, ஆக்ரா மற்றும் புவனேஸ்வர் போன்றவை இடம்பெற்றுள்ளது. எனினும் நகரின் சில பழமையான மற்றும் பேமஸ் உணவகங்கள் மட்டும் டெலிவரிக்கு அனுமதிக்கப்படுகிறது.
உணவு எவ்வாறு விநியோகம் செய்யப்படுகிறது?..
இந்த ஸ்கீம் வாயிலாக உணவு ஆர்டர் செய்வோருக்கு உணவகங்களில் புதியதாக தயார் செய்யப்பட்டு விமானம் மூலம் அனுப்பப்படும். விமானப் பயணத்தின்போது உணவு பாதுகாப்பாக இருப்பதற்கு ஏதுவாக மீண்டுமாக பயன்படுத்தக்கூடிய மற்றும் சேதமடையாத அதி நவீன மொபைல் குளிர்பதன தொழில் நுட்பம் கொண்ட பாக்ஸ்களில் உணவு பேக் செய்யப்படும். வாடிக்கையாளர்கள் உணவைப் பெற்றதும் மைக்ரோவேவ், ஏர்-ப்ரை (அல்லது) பான்-ஃப்ரை வாயிலாக உணவை சூடுபடுத்தி கொள்ளலாம் என ஜொமோட்டோ விளக்கம் அளித்துள்ளது. அடுத்து சில வாரங்களில் இச்சேவை நாடு முழுதும் விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது.