இன்றைய காலகட்டத்தில் இணையதள சேவையானது பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் மற்றும் நெட்வொர்க் சேவை இல்லாமல் ஒரு நாளை கடப்பது என்பது தற்போது கடினமான ஒன்றாகவே மாறிவிட்டது. இந்நிலையில் செல்போனை பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது நெட்வொர்க் சேவை மெதுவாக இருந்தால் பயன்படுத்தும் நபர்களுக்கு மிகவும் எரிச்சலாக இருக்கும். இந்த மாதிரியான சூழ்நிலையில் நெட்வொர்க் சேவையை எப்படி அதிகரிக்கலாம் என்பது குறித்த சில டிப்ஸ்களை தற்போது பார்க்கலாம். அதாவது நெட்வொர்க் சேவை மெதுவாக இருக்கும் போது ஏரோபிளேன் மோடை ஆன் செய்துவிட்டு சிறிது நேரம் கழித்து ஆப் செய்தால் நெட்வொர்க்கில் ஓரளவு வேகம் கிடைக்கும்.
அதன்பிறகு நெட்வொர்க் சேவையானது நீங்கள் பயன்படுத்தும் சிம்மை பொறுத்து கிடைக்கிறது. 4ஜி நெட் பயன்படுத்தும் போது கூட சில நேரங்களில் சிக்னல் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்கிறது. அந்த சமயத்தில் நீங்கள் settings option-க்குள் சென்று 2ஜி, 3ஜி, 4ஜி ஆட்டோ விருப்பத்தை தேர்வு செய்தால் நெட்வொர்க் வேகத்தில் ஓரளவு மாற்றம் கிடைக்கும். மேலும் சில சமயங்களில் சிம் கார்டு தூசியாக இருந்தாலும் கூட நெட்வொர்க் குறைவான வேகத்தில் இருக்கும். எனவே சிம்கார்டை சுத்தம் செய்து மீண்டும் செல்போனில் பொருத்துவதன் மூலம் நெட்வொர்க் சேவையை அதிகரிக்க முடியும்.