Categories
சினிமா தமிழ் சினிமா

“இன்டர்வெல் கிடையாது, அது ஒரு மகிழ்ச்சியான பீலிங்”…. திருமணம் குறித்து நெகிழ்ச்சி கருத்தை சொன்ன நயன்தாரா….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா நடிப்பில் அண்மையில் கோல்ட் திரைப்படம் ரிலீசாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு நடிகை நயன்தாரா நடித்துள்ள கனெக்ட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த படத்தை அஸ்வின் சரவணன் இயக்க, சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை விக்கி மற்றும் நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் நடிகை நயன்தாரா கனெக்ட் படத்தின் ப்ரோமோஷனுக்காக தொகுப்பாளினி டிடி-க்கு பேட்டி கொடுத்தார்.

அந்த பேட்டியின் போது நடிகை நயன்தாரா பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அப்போது திருமணம் குறித்தும் நடிகை நயன்தாரா பேசியுள்ளார். அவர் பேசியதாவது, திருமணம் என்பது பெண்களுக்கு இன்டர்வெல் கிடையாது. அது ஒரு மகிழ்ச்சியான பீலிங். திருமணத்திற்கு பிறகு பெண்களின் வாழ்க்கை மாறித்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது என்று கூறியுள்ளார். மேலும் நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும்  கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு அண்மையில் வாடகை தாய்முறையில் இரட்டை ஆண் குழந்தை பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |