Categories
தேசிய செய்திகள்

இன்னும் இரண்டே நாட்கள்தான்…. முழு மின் தடை ஏற்படும் அபாயம்…. அமைச்சர் அதிர்ச்சி தகவல்….!!!

நாட்டில் மின் உற்பத்தி ஆலைகளுக்கு நிலக்கரி வினியோகம் குறைந்துள்ள நிலையில் தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட பல மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் முழு மின் தடை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் மொத்தமாக நிலக்கரி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் 135 மின்னலைகள் இயங்குகின்றன. நாட்டின் மொத்த மின் தேவையில் 70 விழுக்காட்டு இந்த ஆலைகள் பூர்த்தி செய்கிறது.

ஆனால் அடுத்த 3 நாட்களுக்கு மட்டுமே இந்த ஆலைகளில் நிலக்கரி இருப்பதாக கூறப்படுகிறது. எனவே நிலக்கரி வினியோகம் முன்னேற விட்டால் அடுத்த இரண்டு நாட்களில் டெல்லியில் முழு மின் தடை ஏற்படும் என்று டெல்லி துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறியுள்ளார். டெல்லிக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் ஆலைகளில் போதிய நிலக்கரி கையிருப்பில் இல்லை.

அது ஒரு நாளுக்கு மட்டுமே உள்ளது. இந்த நிலக்கரி தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டது போல தகவல் வெளியாகியுள்ளது. இதிலும் அரசியல் நடந்து கொண்டிருக்கிறது. மேலும் உடனடியாக மின் உற்பத்தி ஆலைகளுக்கு தேவையான நிலக்கரியை வினியோகிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |