இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒரு சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயர் பதவிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. ஆனால் தற்போது வரை ஒரு தடுப்பூசி கூட மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. அனைத்து தடுப்பூசிகளும் சோதனை கட்டத்தில் தான் உள்ளன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொடர்பான அனைத்து கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது.
அதில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி கூறுகையில், “அடுத்த ஒரு சில வாரங்களில் தடுப்பூசி கிடைக்கும் என்று நம்பிக்கை உள்ளது. இந்தியாவில் 8 தடுப்பூசிகள் மூன்றாம் கட்ட சோதனையில் உள்ளன. விஞ்ஞானிகள் அனுமதி அளித்தவுடன் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும். முன்களப்பணியாளர்கள், முதியவர்கள் மற்றும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டோருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.