தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்பப்படும் பொருட்கள் பிரித்தெடுக்கும் பணி காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர் என நான்கு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த தொகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக வேட்பாளர்களின் சின்னங்கள், பெயர்கள் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பொருத்தும் பணி நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தேர்தல் அலுவலர்கள் தொகுதிகள் வாரியாக வீடுகளுக்கு நேரடியாக பூத் சிலிப்புகளை பிரித்தெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் காரைக்குடி தொகுதிக்கு உட்பட்ட வாக்கு பதிவு மையத்தில் பயன்படுத்தப்படும் சீல் வைக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், பூத் சிலிப்புகள், ரப்பர் ஸ்டாம்புகள், சானி டைசர், விரலில் வைக்கப்படும் மை ஆகிய பொருள்களை தேர்தல் அலுவலர்கள் மற்றும் வருவாய் துறையினர் வாக்குப்பதிவு மையத்திற்கு அனுப்புவதற்காக பிரித்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணி தேவகோட்டை கோட்டாட்சியரும், காரைக்குடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலருமான சுரேந்திரன் தலைமையில் நடைபெற்றது.