2021 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்றுநேரத்தில் தொடங்க இருக்கிறது. தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. சுமார் 150000 வாக்கு எண்ணும் பிரதிநிதிகளுக்கும், 12 ஆயிரம் பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனைத்து தேர்தல் வாக்கு எண்ணிக்கை – 75 மையங்களிலும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Categories