Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“இன்னும் கல்யாணம் ஆகல” ஓய்வு பெற்ற ராணுவ வீரரின் முடிவு…. போலீஸ் விசாரணை…!!

ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள காவேரிப்பட்டணம் பகுதியில் ஓய்வுபெற்ற ராணுவ வீரரான நாராயணன் என்பவர் வசித்து வந்துள்ளார். 46 வயதுடைய நாராயணனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த நாராயணன் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாராயணனின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |