பஞ்சாப் மாநிலத்தில் சாலையில் இளம்பெண் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாபை சேர்ந்தவர் மன்ப்ரித் கவுர் ( 31 வயது). இவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று காலை 7 மணிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்ற இவர் அப்பகுதியில் உள்ள பிரதான சாலை ஒன்றில் நின்று கொண்டு தன் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குளித்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இச்சம்பவம் குறித்து அவரின் தந்தை என் மகளை யாருமே காப்பாற்ற முன்வரவில்லை, அவளுக்கு இன்னும் திருமணம் கூட ஆகவில்லை, அவர் எப்படி இறந்தார்? என்று எனக்கு புரியவில்லை என்று சோகத்துடன் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.