தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது.இதன் தொடர்ச்சியாக வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி,காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நேற்று முன்தினம் சென்னை அருகே கரையைக் கடந்தது.அதனால் பெரும்பாலான மாவட்டங்களில் இடைவிடாது கன மழை வெளுத்து வாங்கியது. சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. வீடுகளிலும் மழைநீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வரவில்லை.இந்நிலையில் தெற்கு அந்தமான் பகுதியில் இன்னும் கொஞ்சம் நேரத்தில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக்குவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடுத்த ஓரிரு மணி நேரத்தில் குமரி,நெல்லை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் திருவள்ளூர் மாவட்டத்தில் லேசான மழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.