சென்னையில் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பாக நேற்று நடைபெற்ற விழாவில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கலந்து கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது: “விக்ரம் பட வெற்றிக்கு பிறகு இப்போது தான் அடுத்த படத்திற்கு எழுத்து வேளையில் ஈடுபட்டு வருகிறேன். இந்த படத்தின் தயாரிப்பு தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
அது வெளியான பின்னரே நான் இதுகுறித்து பேச முடியும். ரஜினியுடன் படம் பண்ண உள்ளதாக வந்த தகவலை நானும் அறிந்தேன். அவ்வளவு சுலபமாக அது நடந்து விடாது. அப்படி நடந்தால் அது எனக்கு சந்தோசம் தான். அனைத்து நடிகர்களுடனும் படம் இயக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை. அஜித், ரஜினி உடனும் பணியாற்ற ஆசை. எல்லாவற்றையும் காலம் தான் முடிவு செய்யும்” என்று அவர் கூறியுள்ளார்.