ஓ பன்னீர்செல்வம் இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு விமானத்தில் இன்று சென்னை புறப்பட்டார். சென்னை வரும் அவர் செய்தியாளர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த கட்ட நகர்வு குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது .சசிகலா மற்றும் டிடிவி தினகரனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நேற்று இபிஎஸ் தரப்பினர் செய்தியாளர்களை சந்தித்து ஓ பன்னீர்செல்வம் அவர்களை ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கி விட்டதாகவும், கட்சிக்கும் அவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று ஓபிஎஸ் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் என்ன கூற போகிறார் என்பது அனைவரிடத்திலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.