புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே ஜல்லிக்கட்டு நடைபெறுவதால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுவதை தடுக்கும் வகையில் இன்னும் சற்று நேரத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார். பிற்பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை 8 டாஸ்மாக் கடைகள் மூடப்படும். ஜல்லிக்கட்டு போட்டி முடிந்த பிறகு மாலை 6 மணிக்கு மேல் மீண்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில், இன்று மீண்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Categories