இன்று (24/10/2022) மாலை சிட்ரங் புயல் தீவிர புயலாக மாறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதன் காரணமாக ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. அத்துடன் வங்கக்கடல், ஒடிசா, மேற்குவங்க கடலோர பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
Categories