தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. வயதானவர்கள் வாக்களிக்கும் விதமாக தபால் வாக்கு முறையை தேர்தல் ஆணையம் அமல்படுத்தியது. இதனால் இன்னும் சில நாட்களில் தபால் ஒட்டு விண்ணப்பங்கள் வாக்காளர்களுக்கு விரைவு தபாலில் அனுப்பி வைக்கப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
CVIGIL ஆப் மூலம் பணப்பட்டுவாடா, தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்களை அனுப்பலாம். விடியோவாக எடுத்தும் அனுப்பலாம். இதுவரை 1,120 புகார்கள் வந்துள்ளன. 695 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.பறக்கும் படையினர் சோதனையில் இதுவரை 109 கோடி ரொக்கம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.