கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒரு பக்கம் மறுபக்கம் இருக்கும் நிலையில் ஜிகா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்கள் அனைத்திலும் பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பு மட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பும் தற்போது அதிகரித்து வருவதால் அம்மாநில மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்நிலையில் கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசிகள் குறித்த தரவை தொகுத்து வருவதால் அடுத்த சில நாட்களுக்கு கேரள மாநிலத்தில் அடுத்த சில நாட்களுக்கு தடுப்பூசி போடப்படாது என்று தெரிவித்துள்ளார்.