Categories
மாநில செய்திகள்

இன்னும் தடுப்பூசி போடலையா….? போக்குவரத்து ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு……!!!!

நாடு முழுவதும் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பதற்காக மாநில அரசுகள் தடுப்பூசி  போடும்  பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. வாரம் தோறும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு இல்லம் தேடி சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஒரு சிலர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருக்கின்றனர்.

எனவே தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி  தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்  கொள்ளாத பணியாளர்கள் செலுத்தி கொள்ளவும், செலுத்தி கொண்டவர்கள் சான்றிதழ்களை சமர்ப்பிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் தடுப்பு செலுத்தி கொள்ளாத பணியாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளது.

Categories

Tech |