Categories
தேனி மாவட்ட செய்திகள்

இன்னும் தடுப்பூசி போடல…. கால்நடை வளர்ப்போர் திடீர் மறியல்…. போக்குவரத்து நெரிசலால் பரபரப்பு….!!

கோமாரி நோய் தடுப்பூசி போட வலியுறுத்தி கால்நடை வளர்ப்போர் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் உப்புக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது. இந்நிலையில் சமீப காலமாக அப்பகுதியிலுள்ள மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கியுள்ளது. இதனால் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்து மாடுகளுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என கால்நடை வளர்ப்பவர்கள் பல வாரங்களாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் இதுவரையிலும் கோமாரி நோய் தடுப்பூசி போடவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த கால்நடை வளர்ப்போர் தங்களது மாடுகளுடன் உப்புகோட்டை பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த வீரபாண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அப்போது மாடுகளுக்கு உடனடியாக கோமாரி தடுப்பூசி போட வேண்டும் என்றும், சேதமடைந்துள்ள கால்நடை துணை சுகாதார நிலையத்தை சீரமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய பின்னரே மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் போக்குவரத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Categories

Tech |