மனைவி ஒருவர் கணவனின் வீட்டின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியில் வசிப்பவர் தமிழ்செல்வி. இவர் மணிகண்டன் என்பவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு ஈரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இதையடுத்து திருமணமான சில மாதங்களிலேயே தமிழ்ச்செல்வியின் வீட்டில் பேசிக் கொண்டதால், அவருடைய வீட்டில் இருந்து 30 சவரன் நகையை வரதட்சணையாக கொடுத்துள்ளனர். அதுமட்டுமின்றி திருமணத்திற்கு பிறகு மணிகண்டன் எந்த ஒரு வேலைக்கும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இதனால் ஆன்லைனில் ரம்மி விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும் மணிகண்டன் தனது மனைவியின் வீட்டிற்கு சென்று விட்டு வரும் போதெல்லாம் தமிழ்செல்வி அப்பாவின் வாங்கி கணக்கில் பணம் காணாமல் போயுள்ளது. இதனால் சந்தேகமடைந்த தமிழ்செல்வி தன் கணவரிடம் இது குறித்து கேட்டபோது இருவருக்கும் சண்டை வந்துள்ளது.
இந்நிலையில் தமிழ்செல்வி வீட்டிலிருந்த தன்னுடைய 30 பவுன் நகையை பார்த்தபோது அவ்வளவும் கவரிங் நகைகளாக இருந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால் காதல் கணவனை பிரிந்த அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த விசாரணையில் ஆன்லைனில் ரம்மி விளையாடிய போது பணத்தை இழந்ததால் தனது மனைவியின் நகைகளை வைத்து விளையாடி அதிலும் தோற்றதால் உண்மையான நகைகளுக்கு பதிலாக போலி நகைகளை வைத்ததை ஒப்புக் கொண்டுள்ளார்.
மேலும் தான் விற்ற நகைகள் மற்றும் பணத்தை 6 மாதத்தில் திருப்பி கொடுத்து விடுவதாக எழுதி கொடுத்துள்ளார். இருப்பினும் இன்னும் நகைகளை தமிழ்செல்வியிடம் கொடுக்கவில்லை மேலும் மணிகண்டன் தலைமறைவாகியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்செல்வி மணிகண்டனை வீட்டின் முன்னால் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறா.ர்