கொரோனா கால ஊரடங்கால் தமிழகம் முழுவதும் தொலைக்காட்சி வாயிலாக மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பிற்கு வரவேற்பும், விமர்சனமும் ஒருசேர எழுந்தன. இதில் இருக்கும் குறைபாடுகள் குறித்து அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன.
இந்த நிலையில் இது குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்கையில், டிவி மூலம் பாடம் கற்பிக்கும் திட்டத்தை தொடங்கும் முன்பே குறை கூறினால் எப்படி ? ஏற்கனவே 5 சேனல்கள் ஒப்புதல் தந்த நிலையில் இன்னும் இரண்டு சேனல்கள் ஒப்புதல் வழங்க உள்ளது. அரசு திட்டத்தை தொடங்கியபின் கருத்தைக் கூறினால் குறைபாடுகளை நீக்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார்.