ராமர் அனைவருக்கும் சொந்தமானவர் என பிரதமர் மோடி புகழ் உரையாற்றியுள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல அரசியல் கட்சித் தலைவர்களும், இந்து அமைப்பை சேர்ந்த தலைவர்களும் கலந்து கொண்டனர். முக்கிய பிரமுகராக கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் விழாவிற்கு பின் மக்களிடம் உற்சாக உரையாற்றினார்.
அதில், கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஜெய் ஸ்ரீராம் கோஷம் ஓங்கி ஒலிக்கிறது. வேற்றுமையில் ஒற்றுமை என்பதற்கு ராமர் கோவில் உதாரணமாக திகழும். இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள இந்தோனேசியாவிலும் ராமாயணம் பயன்பாட்டில் உள்ளது. ராமர் எல்லா இடத்திலும் உள்ளார். அவர் அனைவருக்கும் சொந்தமானவர். இந்த தருணம் நடந்ததை கோடிக்கணக்கான இந்தியர்கள் இன்னும் நம்ப வில்லை என்றும் தெரிவித்தார்.