உலகின் ஆபத்தை கணிக்க உருவாக்கப்பட்ட டூம்ஸ்டே கடிகாரம் நள்ளிரவை நெருங்க 100 வினாடிகளே இருப்பதால் அச்சம் ஏற்பட்டுள்ளது.
உலகில் சிறிய அளவிலான மாற்றங்களும் அச்சுறுத்தல்களும் ஏற்பட்டு கொண்டிருப்பது வழக்கம். இதன் படி இந்த 2021 ஆம் வருடமானது மிகவும் ஆபத்தான வருடமாக இருக்கும் என்று பாபா வங்கா ஏற்கனவே கணித்திருந்தார். இந்நிலையில் மனித இனத்தின் ஆபத்தை குறிப்பதற்காக கடந்த 1947 ஆம் வருடத்தில் அணு விஞ்ஞானிகள் இணைந்த Bulletin of the Atoic Scientists என்ற அமைப்பு டூம்ஸ்டே என்ற கடிகாரத்தை உருவாக்கியது. இந்த கடிகாரமானது தற்போது நள்ளிரவை நெருங்குவதற்கு சுமார் 100 வினாடிகள் தூரம் தான் இருக்கிறது.
அதாவது இந்த கடிகாரம் நள்ளிரவை அடைந்தால் மிகப்பெரிய ஆபத்து உலகை தாக்கும். அதாவது இந்த டூம்ஸ்டே கடிகாரமானது கடந்த வருடத்தில் நள்ளிரவை அடைவதற்கு இரண்டு நிமிடங்கள் தூரத்தில் இருந்துள்ளது.அதன் அறிகுறியாக தான் ஒரு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது இந்த கடிகாரம் நள்ளிரவை அடைய 100 வினாடிகளே இருப்பதால் இவ்வருடத்தின் தொடக்கத்திலேயே அணு ஆயுத போர், புதிய கொரோனா வைரஸ் தொற்று, காலநிலை மாற்றம் போன்றவற்றுடன் போராட வேண்டியுள்ளது.
எனவே இந்த டூம்ஸ்டே கடிகாரம் நள்ளிரவை அடைந்து விட்டால் என்ன நிகழும் என்பது தெரியவில்லை என்ற அச்சம் உருவாகியுள்ளது. மேலும் இந்த அமைப்பானது லாப நோக்கில் உருவாக்கப்பட்டதல்ல. இந்த குழு கடந்த 1945 ஆம் வருடத்தில் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பாகும். இந்த குழுவில் 13 உறுப்பினர்கள் நோபல் பரிசை பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.