Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இன்னும் நெறைய கிடைக்கும்…. வாட்சப்பை நம்பி…. பணத்தை பறிகொடுத்த பெண்….!!

வாட்ஸ்-அப்மூலம் போலியான தகவல் அனுப்பி 2 1/2 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள முல்லைநகர் பகுதியில் ஜெயந்தி (38) என்பவர் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் மாதத்தில் ஒரு வாட்ஸ்-அப் எண்ணிலிருந்து அவருக்கு குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. அதில் வீட்டிலிருந்தே பணம் சம்பாதிக்கலாம் என்று இருந்துள்ளது. இதனை நம்பிய ஜெயந்தி வாட்சப் மூலம் பதிலளித்து இதுகுறித்து விபரங்களை கேட்டுள்ளார். இதனை கேட்ட சிறிது நேரத்திலேயே ஜெயந்தியின் எண்ணை ஒரு டெலிகிராம் குழுவில் இணைத்துள்ளனர். இதனைதொடர்ந்து அதில் இருந்த  இணையதள லிங்க் ஒன்று இருந்தது. அதற்குள் சென்ற ஜெயந்தி அதில் குறிப்பிட்ட விபரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்துள்ளார்.

மேலும் அந்த இணையதளத்தில் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என இருந்ததால் ஆன்லைன் மூலம் ஜெயந்தி பணம் செலுத்தி உள்ளார். இதனையடுத்து அவரது வங்கி கணக்கில் இருமடங்கு பணம் போடப்பட்டதாக குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது. இதனை பார்த்து ஆச்சரியமடைந்த ஜெயந்தி அதிக பணம் வரும் என்ற பேராசையில் மொத்தம் 2 லட்சத்து 63 ஆயிரத்து 820 ரூபாய் வரை செலுத்தியுள்ளார். ஆனால் இதுவரையிலும் அவருடைய வங்கி கணக்கிற்கு எவ்வித பணமும் திரும்ப வரவில்லை.

இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜெயந்தி உடனடியாக ராமநாதபுரம் சைபர்கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஜெயந்திக்கு வந்த வாட்ஸ்-அப் எண்ணை வைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இதுபோன்ற மோசடி தகவல்கள் அதிகமாக வரும் நிலையில் பொதுமக்கள் இதனை நம்பி பணம் செலுத்த கூடாது என்று காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Categories

Tech |