Categories
அரசியல் மாநில செய்திகள்

“இன்னும் பல ஆடியோக்கள் வெளிவரும்”….. EPS-க்கு காத்திருக்கும் அதிர்ச்சி….!!!!

இபிஎஸ் குறித்து பொன்னையன் பேசிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், புகழேந்தி மேலும் ஒரு குண்டை வீசியுள்ளார்.

சென்னை வானகரம் ஸ்ரீவாரி மண்டபத்தில் கடந்த 11ஆம் தேதி அதிமுக பொது குழு நடைபெற்றது இந்த பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்தார். இதையடுத்து எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர் பொன்னையன் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரான கன்னியாகுமரியை சேர்ந்த நாஞ்சில் கோபாலனிடம் செல்போனில் பேசும் 9 நிமிட ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த ஆடியோவில் தொண்டர்கள் இரட்டை இலை சின்னத்தின் பக்கம் உள்ளனர். ஆனால் தலைவர்கள் பணத்தின் பக்கம் உள்ளனர். அவர் பணத்தை பாதுகாப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டுள்ளனர். தங்கமணி முக ஸ்டாலினை டெவலப் பண்ண ஆரம்பித்து விட்டார். தற்போது அவரை காப்பாற்றிக் கொள்ள ஸ்டாலினிடம் ஓடுகிறார். அதேபோல கேபி முனுசாமி ஸ்டாலினை திட்டுவதை நிறுத்திவிட்டார். பணத்தை பாதுகாக்க இப்படி ஆடுகிறார்கள்.

கேபி முனுசாமி துரைமுருகனை பிடித்து பெட்ரோல் பங்கினை வாங்கி விட்டார். இதனால் மாதம் இரண்டு கோடி சம்பாதிக்கிறார். அதிமுக தொண்டர்கள் தடுமாறுகிறார்கள். கேபி முனுசாமி ஒரு நக்சனைடாக இருந்தார். எடப்பாடி பின்னால் சென்றாள் தான் சம்பாதித்ததை பாதுகாத்துக் கொள்ள முடியும். தளவாய் சுந்தரம் தான் இந்தியாவிலேயே மிகப்பெரிய புரோக்கர். முதலில் ஒற்றைத் தலைமை பிரச்சினையை பேசியது தளவாய் சுந்தரம். பொதுக்குழு கூட்டத்தில் சிவி சண்முகம் நாய் கத்துவது போல் கத்துகிறார்.

இதனால்தான் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. எடப்பாடி ஓ பன்னீர்செல்வம் உடன் சமாதானம் பேச தயாராக இருந்தார். ஆனால் அவருக்கு எம்எல்ஏக்கள் ஆதரவு இல்லை. எடப்பாடி முதுகிலேயே எம்எல்ஏக்கள் குத்துகின்றனர். அதனாலேயே எம்எல்ஏக்கள் சொல்வதை எடப்பாடி பழனிச்சாமி கேட்கின்றார். சிவி சண்முகம் கையில் ஜாதி அடிப்படையில் 19 எம் எல் ஏக்கள் உள்ளனர். கேபி முனுசாமி ஒற்றை தலைமைக்கு வர முயற்சிக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி கொள்கையை விட்டுவிட்டு பதவிக்கு ஆசைப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறார் என்று அந்த ஆடியோவில் அவர் பேசியிருந்தார்.

இது இந்த ஆடியோவானது அதிமுகவில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில் இது தொடர்பாக பொன்னையன் அதிமுக நிர்வாகி நாஞ்சில் கோபாலன் உள்ளிட்ட யாரிடமும் நான் பேசவில்லை. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி குரல் மிமிக்ரி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆடியோ போலியானது. எடப்பாடி பழனிச்சாமி மற்றும் கேபி முனுசாமி உள்ளிட்டோர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளரான புகழேந்தி, “விரைவில், மேலும் பல ஆடியோக்கள் வெளிவரும். ஓபிஎஸ் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே இபிஎஸ்-ஐ ஏற்றுக்கொள்வோம். கேபி முனுசாமி, ஜெயக்குமார் போன்ற ஒரு சிலரால் இபிஎஸ்க்கு அழிவு வந்துவிட்டது” என்றார்.

Categories

Tech |