உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் இருக்கிறது. அந்த வகையில் செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவருக்கு சாலையோர உணவு வியாபாரி ஒருவர் இலவசமாக உணவு வழங்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பாராட்டி இணையவாசிகள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் செருப்பு தைக்கும் தொழிலாளி சாலையோர உணவு விற்ப்பவரிடம் நின்று கொண்டிருக்கிறார்.
அப்போது அந்த உணவக உரிமையாளர் ஒரு நாளைக்கு தேவையான பணத்தை சம்பாதித்து விட்டீர்களா? என்று கேட்க பணம் இல்லை என்றாலும் தன்னுடைய கடைக்கு வந்து சாப்பிடும் படியும், உதவி செய்யவே தான் இருப்பதாகவும் கூறுகிறார். இதைக் கேட்ட தொழிலாளி நெகிழ்ந்து போகிறார். மேலும் அந்த உணவக உரிமையாளர் தட்டில் ரொட்டி, டால் ஆகிவற்றை வைத்து அந்த தொழிலாளிக்கு சாப்பிட கொடுக்கிறார். இதனை அருகில் இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோ மனிதர்கள் மத்தியில் இன்னும் மனிதன் வாழ்கிறது என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.