தடுப்பூசி மையங்கள் வரும் மார்ச் 29 முதல் மூடப்படும் என பிரிட்டன் தேசிய சுகாதார மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா வைரஸ் கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வுகான் நகரில் தோன்றியது. இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளறப்பட்டு தற்போது உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து பிரிட்டன் தேசிய சுகாதார மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மார்ச் மாதம் 29 ஆம் தேதி முதல் சுகாதார தடுப்பூசி மையங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதனால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்களின் முதல் டோஸ் தடுப்பூசியை இங்கிலாந்து தேசிய முன்பதிவு முறையை பயன்படுத்தி போட்டுக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும் 18 வயதிற்கு மேல் மருத்துவரீதியாக பாதிக்கப்படுபவர்களும் சமீபத்திய வழிகாட்டுதலின் கீழ் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளலாம் என கூறினர். மேலும் இந்த தடை ஏப்ரல் மாதம் முழுவதும் நீடிக்கும் என்றும் இரண்டாவது தடுப்பூசி டோஸ்களை வழங்க தடுப்பூசி மையங்கள் திறக்கப்படுவதில் கவனம் செலுத்தப்பட போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.