Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் மூன்று மாதம் மட்டுமே… கருணாநிதி கனவு நிறைவேறும்… காத்திருங்கள்… ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் இன்னும் மூன்று மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப் போகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றை அவர் கலந்து கொண்டார். அப்போது மதுரையில் உள்ள சிம்மக்கல் என்ற பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலையை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதன் பிறகு ஸ்டாலின் பேசும்போது, “மதுரையில் என் தந்தையின் சிலை அமைப்பதற்கு அரசு பல்வேறு தடைகளை போட்டது. பல்வேறு சட்ட போராட்டங்களுக்கு பிறகு மதுரையில் கருணாநிதி சிலை திறக்கப்பட்டிருக்கிறது. அதற்காக சட்டப் போராட்டம் நடத்திய அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இன்னும் மூன்று மாதத்தில் கருணாநிதியின் நீண்ட கால கனவு நிறைவேற போகின்றது” என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |