மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் அங்கு நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு பேசிய அவர், காஷ்மீரில் உள்ள மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி நீக்கப்பட்டுள்ளது. மக்களே இனி யாரும் உங்களுக்கு அநீதி இழைக்க முடியாது என்பதை சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். காஷ்மீரின் அமைதிக்கு இடையூறு செய்பவர்களை வெற்றி பெற அனுமதிக்க மாட்டோம். புதிதாக தொழிற்சாலைகளை நாங்கள் அறிமுகம் செய்தபோது இங்கு முதலீடு செய்ய யார் வருவார்கள்? என மூன்று குடும்பங்களை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் பிரதமரின் முயற்சி காரணமாக 12 ஆயிரம் கோடி முதலீடு தற்போது வரை வந்துள்ளது. 2022ம் ஆண்டுக்குள் இன்னும் பல ஆயிரம் கோடி முதலீடுகளை வரும். இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். ஜம்மு-காஷ்மீரில் உள்ள விமான நிலையம் விரிவுபடுத்தப்படும். இங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஹெலிகாப்டர் சேவை அறிமுகம் செய்யப்படும். அடுத்த இரண்டு வருடங்களில் ஜம்மு மற்றும் ஸ்ரீ நகரில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்று பேசியுள்ளார்.