திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற இருக்கிறது. இது குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
பிரசித்தி பெற்ற திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில் வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை பிரம்மோற்சவ விழா நடைபெற இருக்கிறது. கொரோனா பொது ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து இவ்வருடம் பிரம்மோற்சவ விழாவிற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இது குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தான செயல் தலைவரான டாக்டர் ஜவஹர் ரெட்டி அவர்கள் கலந்து கொண்டார். சுமார் இரண்டு மணி நேரம் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து துறை தலைவர்களுக்கும் பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன. கொரோனா மூன்றாம் அலை பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் எச்சரித்த காரணத்தினால் கடந்த வருடத்தைப் போல இந்த வருடமும் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.