கேம் விளையாடி உயிர் பிழைத்த 80 வயது மூதாட்டி.
அமெரிக்காவை சேர்ந்த ஹோல்ட் என்ற 80 வயது மூதாட்டி ஒருவர் வோர்டுலே என்ற கேமை விளையாடி வருகிறார். இவர் கடந்த சில மாதங்களாகவே இந்த கேமை தொடர்ச்சியாக விளையாடி வருகிறார். தினமும் அந்த கேமில் பெரும் ஸ்கோரை தன்னுடைய மகளுக்கு அனுப்பும் வழக்கம் கொண்டிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த 5-ஆம் தேதி இரவு ஹோல்ட் வீட்டில் ஜன்னல் கண்ணாடியை உடைத்து மர்ம நபர் ஒருவர் கத்திரிக்கோலை காண்பித்து ஹோல்டை பிணைக்கைதியாக அவர் வீட்டிலேயே வைத்துள்ளார்.
மேலும் அவரது மூத்த மகள் மெரிடித் என்பவர் தினமும் விளையாட்டின் ஸ்கோரை அனுப்பாததால் சந்தேகம் அடைந்துள்ளார். இதனால் போலீசாரை தொடர்பு கொண்டு அவரது அம்மா நலமுடன் இருக்கிறாரா என சோதித்து பார்க்க அவர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். அப்போது அங்கு வந்த போலீசார்க்கு ஹோல்ட் பிணைக்கைதியாக இருப்பது தெரியவந்தது. மேலும் ஹோல்ட் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் போலிசாரால் மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து பிடிக்கப்பட்ட அந்த நபர் 32 வயது உடைய ஜேம்ஸ் டேவிஸ் என்பவர் ஆவார். இவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.