Categories
அரசியல்

இன்னும் 1வருஷம் தான்…. ”பெட்ரோல் விலை குறையும்”… பல கோணத்தில் பாஜக …!!

பெட்ரோல் விலையை குறைப்பதற்கு நம்முடைய மத்திய அரசு பல கோணத்தில் முயற்சி செய்திருக்கிறார்கள் என தமிழக பாஜக தலைவர் தெரிவித்தார்.

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே செல்வதற்கு இரண்டு விஷயங்கள் சொல்லி இருக்கிறோம். அதாவது பெட்ரோல் விலையை குறைப்பதற்கு நம்முடைய மத்திய அரசு பல கோணத்தில் முயற்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக நம்முடைய வெளியிருந்து வர பெட்ரோலியம் சோர்சை திசை திருப்ப பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அதைவிட முக்கியமானது 2017ல் நம்ம ஜிஎஸ்டி கொண்டு வரும்பொழுது 2022ல் ஜிஎஸ்டி அந்த ஐந்து வருடகாலம் அந்த காம்பினேஷன் பீரியட் முடியும்போது அதற்கப்புறம், இந்தியாவில் இருக்கக்கூடிய எல்லா பொருட்களுக்கும் ஜிஎஸ்டி கீழ வரணும் என்பதற்காகவே ஜிஎஸ்டி சட்டம் கொண்டுவரப்பட்டது.

இன்னும் ஒரு வருடம் நமக்கு இருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சிலில் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு பெட்ரோலியத்தை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதற்கு ஒப்புக் கொடுக்க வேண்டும். ஏனென்றால் மாநில அரசு போடுகின்ற வரியும் கட்டுக்குள் வரும், மத்திய அரசு போடுகின்ற வரியும் கட்டுக்குள் வரும், செஸ் வரி வராது.

அதனால் நம்முடைய முன்னாள் பெட்ரோலியத்துறை மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அதிகாரபூர்வமாக நமக்கு சொல்லி இருக்காரு. ஜிஎஸ்டிக்குள் பெட்ரோலை கொண்டு வர வேண்டுமென்று, அதற்க்கு திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அரசு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்று வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.

Categories

Tech |