தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். மறுபக்கம் மக்களைக் கவர அனைத்து கட்சியினரும் மக்களிடம் நேரடி தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர்.
இந்நிலையில் அமைச்சர் செல்லூர் ராஜு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். மதுரையில் பிரச்சாரம் மேற்கொண்ட அவர் பேசுகையில், “இன்னும் ஒரு வருடத்தில் மதுரையை சிட்னியாக மாற்றிக்காட்டுவேன் என உறுதி அளித்துள்ளார்.