தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருவதால் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்தது.
ஆனால் மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பள்ளிகள் திறப்பது பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக அரசு வெளியிடவில்லை. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டிற்கான பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்ற பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கால அட்டவணை இன்னும் 10 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட்ட போதிலும் தேர்வு கட்டாயம் நடைபெறும். இருக்கின்ற நாட்களுக்கு ஏற்றவாறு கல்வியாளர்கள் உடன் கலந்து ஆலோசித்து, பாடத்திட்டங்களை மாற்றியமைத்து அட்டவணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.