தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.இதனைத் தொடர்ந்து வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று தமிழக கரையை நெருங்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்னும் 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக மாறும் நிலையில் வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக இன்றும் நாளையும் அதிக கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.கன மழை வெளுத்து வாங்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Categories