2035 ஆம் ஆண்டு வரை சீனாவின் அதிபர் ஜின்பிங் பதவி வகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் அதிபர் ஜின்பிங் 2012ஆம் ஆண்டு பொறுப்பேற்றார். அவரது பதவிக்காலம் 2022ஆம் ஆண்டு முடிவடைவதாக இருந்தது. இந்நிலையில் கடந்த 4 நாட்களாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு பீஜிங்கில் வைத்து நடைபெற்றது. இந்த மாநாட்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் 166 மாற்று உறுப்பினர்கள் 198 மத்திய குழு உறுப்பினர்கள் பங்கு பெற்றனர். அதிபர் ஜின்பிங்கின் செயல்பாடுகள் குறித்து இந்த மாநாட்டில் மதிப்பிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2035 ஆம் ஆண்டு வரை சீனாவின் அதிபராக ஜின்பிங் பதவி வகிக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதனால் ஜின்பிங்கின் 82 ஆவது வயது வரை அவர் அதிபராக பதவி வகிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மாநாட்டில் 14 ஆவது ஐந்தாண்டு திட்டத்திற்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது. அதன்படி உள்ளூர் சந்தையை மேம்படுத்தி பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்கான திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
ஏற்றுமதியை நம்பி இருக்காமல் உள்நாட்டு கட்டமைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் கட்சியின் பொதுச் செயலாளர் பதவி ராணுவத் தலைமை பதவி போன்றவற்றையும் ஜின்பிங் கவனித்து வரும் நிலையில் இந்த பதவிகளிலும் அவர் ஆயுள் முழுவதும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.