Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இன்னும் 18 வயசு ஆகல…. அதுக்குள்ள 2 தடவை திருமணம்… கோவையில் பரபரப்பு…!!!

17 வயதே ஆன சிறுமிக்கு இரண்டு முறை திருமணம் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கு அவரின் பெற்றோர் திண்டுக்கல்லில் உறவினர் ஒருவரான கூலித் தொழிலாளிக்கு போன வருடம் திருமணம் செய்து வைத்துள்ளனர். தனது கணவரோடு குடும்பம் நடத்தி வந்த நிலையில் சிறுமிக்கு 25 வயது வாலிபரான சிவா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த காதல் விவகாரம் சிறுமியின் கணவருக்கு தெரிந்ததால் அவரை கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி கணவருடன் சண்டை போட்டு கொண்டு தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்நிலையில் பெற்றோருடன் வசித்து வந்த சிறுமி திடீரென காணாமல் போனார். சிறுமி காணாமல் போனது குறித்து அவரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி சிறுமியை தேடி வந்தனர். இதையடுத்து சிறுமி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மச்சூர் பகுதியில் இருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில்  சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

இதில் சிவா சிறுமியை கடத்திச் சென்று அவரை இரண்டாவதாக திருமணம் செய்தது தெரியவந்தது. ஆனால் தற்போது சிறுமிக்கு 17 வயது தான் ஆகிறது. இந்நிலையில் சிறுமியை கடத்தி சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 15 வயதில் சிறுமிக்கு குழந்தைத்திருமணம் செய்து வைத்த பெற்றோர் மற்றும் அவரது கணவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |