ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய டி20 போட்டியில் ரோஹித் சர்மா ஒரு புதிய சாதனையை படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று (செப்டம்பர் 20) இரவு 7:30 மணிக்கு பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இந்த டி20 போட்டியில் ரோகித் சர்மா 2 சிக்சர் அடித்து விட்டால் அதிக சிக்சர் அடித்தவர் பட்டியல் முதல் இடத்திற்கு சென்று விடுவார்.. தற்போது நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் 172 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் இருக்கும் நிலையில், இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 171 சிக்ஸர்களுடன் இருக்கிறார்.
இவருக்கு அடுத்தபடியாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சருடன் 3ஆவது இடத்தில் இருக்கிறார். அதற்கு அடுத்தபடியாக இங்கிலாந்து அணியின் இயான் இயான் மோர்கன் உள்ளார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 2022 ஆம் ஆண்டில் மட்டும் 17 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்ஸர்களும் அடங்கும்.. எனவே இன்று நடைபெற உள்ள டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்து ஹிட்மேன் முதலிடத்தை பிடிப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்..