தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சி செய்து வரும் நிலையில் அ.தி.மு.க எதிர்க் கட்சியாக இருக்கிறது. ஆனால் பா.ஜ.கவினர் தமிழகத்தில் நாங்கள் தான் என எதிர்க்கட்சி என கூறி வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தாராபுரத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அவர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம் பேசியதாவது, மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் 86 கோடி ஜி.எஸ்.டி விடுவித்துள்ளது. இதில் தமிழகத்திற்கு 9 ஆயிரத்து 608 கோடி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலின் போது தாராபுரத்தில் வேட்பாளராக மத்திய அமைச்சர் முருகன் போட்டியிட்டார்.
இவர் தேர்தலில் தோல்வியைத் தழுவினாலும் பா.ஜ.க கட்சி அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்துள்ளது. அதன் பிறகு தமிழகத்தில் வளர்ச்சி பாதையை அமைப்பதற்கான வழியை பா.ஜ.க அரசு தேடிக்கொண்டே இருக்கிறது. இனி வருகின்ற 2024-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஈரோடு மாவட்டத்தில் பா.ஜ.க வேட்பாளர் வெற்றி பெற்று நாடாளுமன்றத்திற்கு செல்வார். இதனையடுத்து பா.ஜ.க கட்சியைச் சேர்ந்த ஒரு அமைச்சரை கூட குறை சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக ஆட்சி செய்து வருகின்றனர். ஆனால் தி.மு.க அமைச்சர்களில் சிலர் ஊழல்வாதிகளாகவே இருக்கின்றனர். இவர்களின் பட்டியலை வருகிற 5-ஆம் தேதி அன்று மதுரையில் நடைபெற விருக்கும் பொதுக்கூட்டத்தின் போது வெளியிடுவோம் என அண்ணாமலை கூறியுள்ளார்.