Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2 நாள் தான்… தேசமே முடங்க போகுது… ஓங்கி ஒலிக்கும் போராட்டம்…!!!

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்திற்கு நாடு முழுவதிலும் பல்வேறு தரப்பினர் தங்கள் ஆதரவை செலுத்தியுள்ளனர்.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக டெல்லியில் விவசாயிகள் இன்று 11வது நாளாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. இதனைத் தவிர மத்திய அரசு விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

ஆனால் அந்த பேச்சு வார்த்தை எந்த ஒரு பதிலையும் எட்டவில்லை. வேளாண் சட்டத்தைத் திரும்பப் பெறும் வரையில் போராட்டம் கட்டாயம் தொடரும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில் கடும் குளிரில் இரவு பகல் பாராமல் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நாடு முழுவதிலும் பெரும் ஆதரவு பெருகியுள்ளது. ஆனால் மத்திய அரசு என்னவோ அதனை ஒரு பொருட்டாக கருதவில்லை.

இந்நிலையில் டிசம்பர் 8-ஆம் தேதி நாடு தழுவிய பாரத் பந்திற்கு விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன இதற்கு மத்திய வணிகர் சங்கங்கள் முழு ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன. ஏற்கனவே பல்வேறு தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |