Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“இன்னும் 2 மாதத்தில் ஒரு குழந்தைக்கு தாயாக போகும் 9ம் வகுப்பு சிறுமி”… தந்தையால் நேர்ந்த கொடூரம்..!!

திருவண்ணாமலையில் பெற்ற மகளையே சொந்த தந்தை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

47 வயதான கூலித் தொழிலாளி கன்னியப்பன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி. குன்னத்தூர் மதுரா அகஸ்தியம்பட்டு கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். மகள் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவியிடம் அவரது தந்தை கண்ணியப்பன் தவறாக நடந்து கொண்டதால் அவர் கர்ப்பம் ஆகியுள்ளார்.

அவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த நிலையில் பள்ளி நிர்வாகம் அப்பெண்ணை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பரிசோதனைக்கு அழைத்து சென்றது. அதில் அந்தப் பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தியபோது அவரது தந்தையால் தான் அந்த மாணவி கர்ப்பம் ஆனதாக தெரிவித்தார். இதையடுத்து பாட்டி லட்சுமி ஆரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |