Categories
தேசிய செய்திகள்

இன்னும் 2.6 கோடி தடுப்பூசிகள் தேவை… மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்த… டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்…!!

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் பேசியபோது இன்னும் 2.6 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ஆம் அலை தலைவிரித்து ஆடும் நிலையில் டெல்லியில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை மிகவும் உச்சத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி எடுத்துக்கொள்வது சிறந்த வழிமுறையாக உள்ளது. இதனையடுத்து டெல்லி முதல்அமைச்சர் திரு அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் காணொளி வாயிலாக செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது மத்திய அரசின் சார்பில் இதுவரை 40 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் டெல்லியில் அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டுமென்றால் 3 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவைப்படும் என கூறியுள்ளனர். எனவே இன்னும் 2.6 கோடி தடுப்பூசிகளை மத்திய அரசாங்கம் வழங்க வேண்டுமென அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories

Tech |