Categories
மாநில செய்திகள்

இன்னும் 25 ஆண்டுகளில் இந்தியா ஆன்மீக வளர்ச்சியில் முதலிடம் பிடிக்கும்….!! ஆளுநர் கே.எம் ரவி பேச்சு…!!

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதினம் 27 வது குருமகாசன்னிதானம் திருஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஞான ரத யாத்திரையை ஆளுநர் கே.என் ரவி துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, “கொரோனா, பூகம்பம் கார்கில் போர் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின் போது தருமபுரம் ஆதீனம் மக்களுக்கு பல்வேறு உதவிகளை புரிந்துள்ளார்.

இன்னும் 25 ஆண்டுகளில் கல்வி, அறிவியல் மட்டுமன்றி ஆன்மீக வளர்ச்சியில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். உலகில் ஆங்காங்கே போர் நடைபெறுவதற்கும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதற்கும் காரணம் அறியாமை தான் இந்த அறியாமையை போக்க ஆன்மீகம்,கல்வி, போதனை போன்றவற்றால் தான் முடியும். மதத்தாலும் மொழியாலும் இந்தியர்கள் பிரிந்திருந்தாலும் அனைவரும் ஒருதாய் மக்கள் என்பதில் எந்த ஐயப்பாடும் இல்லை.!” என கூறினார்.

Categories

Tech |