Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 3மாசம் தான்..! புழல் சிறையில் இருப்பீங்க… முக.ஸ்டாலின் எச்சரிக்கை …!!

தமிழக அமைச்சர்கள் புழல் சிறையில் இருப்பார்கள் என திமுக தலைவர் முக.ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் நிலையில், தூத்துக்குடியில் உங்கள்  தொகுதியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியானது நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு மக்களிடையில் குறைகளை கேட்டறிந்து, அவர்களுடைய குறைகளையும், கோரிக்கைகளையும் மனுவாக பெற்று அங்கு இருக்கக்கூடிய பெட்டியில் வைத்து அதனை சீல் வைத்தார். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட்களில் அதில் உள்ள கோரிக்கைகளையும், மனுக்களையும் எல்லாம் நிறைவேற்றித் தருவேன் என்று மக்களிடையில் வாக்குறுதி அளித்தார்.

மேலும் பேசிய ஸ்டாலின், இன்னும் மூன்று மாதத்தில்  தானே இருக்கிறது, இருக்குறதையும் அடிச்சிட்டு போயிடலாம். நீங்கள் கோட்டையில் இல்ல புழல் சிறையில் தான்  இருக்கு போறீங்க. இதுதான் உண்மை, இது தான் நடக்கப் போகிறது.

திமுக ஆட்சி இருந்த பொழுது மகளிர் சுய உதவிக்குழுக்கள் பேங்குக்கு சென்றால், உட்கார வச்சி, காபி கொடுத்து, கூல் டிரிங்க்ஸ் கொடுத்து  வங்கி கடன், மானியத் தொகையை கௌரவமாக கொடுப்பாங்க. இப்போ உள்ள போக முடியல. மகளிர் சுய உதவி குழுவை சேர்ந்த சகோதரிகள் வங்கிக்கு போனா விரட்டி அடிக்கிறார்கள். அந்த அளவிற்கு இன்றைக்கு துன்பத்தில் ஆளாகியிருக்கிறார்கள். கவலைப்படாதீங்க உங்கள் பிரச்சனைக்கு ஒரு நல்ல முடிவு வரப்போகிறது அது தான் இந்தத் தேர்தல் என ஸ்டாலின் தெரிவித்தார்.

Categories

Tech |