தமிழகத்தில் வருகின்ற 14-ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை அதிக அளவில் பெய்து வருகிறது. இந்த நிலையில் வருகின்ற 14-ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் மீட்பு படையினரை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொண்டனர். இவர்களின் கோரிக்கையை ஏற்று இன்று 22 தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் 4 மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.