திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி நேரடி பிரச்சாரத்தை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுகவின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தற்போது சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள நடைபெற்று வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார். அப்போது தொண்டர்கள் நிர்வாகிகளை உற்சாகப்படுத்தும் வகையில் பேசிய அவர் தேர்தல் முடியும் வரை ஒரே லட்சியம் தலைவர் கோட்டையில் அமர வேண்டும் என்பதே ஒரே சபாதாமாக எடுக்கும்படி அறிவுறுத்தினார்.
அதன் தொடர்ச்சியாக துரைமுருகன் பேசுகையில் வரும் 23ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தை தொடங்குவதாக கூறியுள்ளார். அதாவது கிராம சபை கூட்டம் ஒன்று முதற்கட்டமாக தொடங்குகிறார்கள். ஜனவரி 10-ஆம் தேதி வரை இந்த கிராம சபை கூட்டம் நடைபெறுகின்றது. சுமார் 16,000 கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.
1500 நிர்வாகிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்று அரசுக்கு எதிரான தீர்மானங்கள் நிறைவேற்ற உள்ளனர் துரைமுருகன் பேசியதில் இது முக்கியமானதாக கருதப்படுகின்றது. அதன்படி 23ஆம் தேதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தை தொடங்கி வைக்கிறார். குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட கிராம சபைக் கூட்டத்தில் அவர் பங்கேற்று பிரச்சாரத்தை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளது.