Categories
தேசிய செய்திகள்

இன்னும் 4 மாதங்களில் கிராமப் பகுதிகளில் வரப்போகுது….. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

அடுத்த 4 மாதங்களில், அதாவது இந்த வருடம் இறுதிக்குள் வங்கிச்சேவை இல்லாத கிராமப் பகுதிகளில் 300 பொதுத்துறை வங்கிக் கிளைகளைத் திறக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. அனைவருக்கும் நிதிசாா்ந்த சேவைகள் கிடைக்கப் பெற வேண்டும் எனும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. 3,000-க்கு மேல் மக்கள் தொகையுள்ள கிராமங்களில் இந்த வங்கிக்கிளைகள் தொடங்கப்படும். இவற்றில் அதிகபட்சமாக ராஜஸ்தானில் 95 கிளைகள் திறக்கப்படவுள்ளது. அடுத்து மத்திய பிரதேசத்தில் 54, குஜராத்தில் 38, மகாராஷ்டிரத்தில் 33, ஜாா்க்கண்டில் 32, உத்தரபிரதேசத்தில் 31 கிளைகள் அமைய இருக்கிறது.

சென்ற மாதம் நடந்த பொதுத்துறை வங்கித் தலைவா்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. இவற்றில் அதிகபட்சமாக பரோடா வங்கி 76 கிளைகளைத் திறக்க உள்ளது. அதன்பின் எஸ்பிஐ 60 கிளைகளைத் திறக்க இருக்கிறது. அனைவருக்கும் வங்கிக்கணக்கு தொடங்கும் ஜன் தன் யோஜனா திட்டம் முன்பே அமலில் இருக்கிறது. அந்த திட்டம் துவங்கப்பட்ட 2014 ஆகஸ்ட் 28 முதல் தற்போது வரை 46 கோடிக்கும் அதிகமான வங்கிக்ணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் ரூபாய்.1.74 லட்சம் கோடி இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தால் கிராமப்பகுதிகளில் 67 % பெண்களும், இடைநிலை நகரங்களில் 56 % பெண்களும் வங்கிக்கணக்கு தொடங்கியுள்ளனா்.

Categories

Tech |