Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் 44 அமாவாசைகள் தான் தி.மு.க ஆட்சிக்கு இருக்கு…. எடப்பாடி பழனிச்சாமி ஸ்பீச்….!!!!!

அண்ணாவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பொதுக் கூட்டம் ஆட்டையாம்பட்டி பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இக்கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு சேலம் புறநகர் மாவட்ட அதிமுக இளைஞரணி சார் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்று முதல் பொது கூட்டத்தில் பங்கேற்க வந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு க்ரைன் வாயிலாக ராட்ஷச மாலை அணிவித்து கட்சி நிர்வாகிகள் அவரை உற்சாகப்படுத்தினர். நிர்வாகிகளின் வரவேற்பை ஏற்றுக் கொண்ட எடப்பாடி பழனிச்சாமி சிறப்புரை ஆற்றினார். தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தாலும் சேலத்தில் அதிமுக தான் ஆட்சியில் உள்ளது. மொத்தம் உள்ள 11 தொகுதிகளில் 10 தொகுதிகளில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர். சேலத்திற்கு 1 அமைச்சர் போட்டிருக்கின்றனர்.

ஆனால் எந்த திட்டமும் கொண்டுவரவில்லை. 44 அமாவாசைகள்தான் தி.மு.க ஆட்சிக்கு இருக்கிறது. 2024-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டப் பேரவைக்கும் தேர்தல் நடக்க வாய்ப்பு உள்ளது. கருணாநிதி இருக்கும் போது ஸ்டாலின் தான் டெம்பரரி தலைவராக இருந்தார். எங்களை குறை கூற ஸ்டாலினுக்கு தகுதிகிடையாது. அதிமுக-வில் அனைத்து தொண்டர்களுமே பொதுச்செயலாளர் தான். தொண்டர்களின் எண்ணத்தை அ.தி.மு.க எதிரொலிக்கிறது. அனைத்து பொதுக் குழு உறுப்பினர்களும் ஒன்றுகூடி நல்ல தலைமையை தேர்ந்தெடுத்தனர். இதனை ஸ்டாலினால் பொறுக்கமுடியவில்லை. எந்த காலத்திலும் அதிமுக-வை உடைக்க இயலாது. கனவுகண்டால் கானல் நீராகத்தான் இருக்க முடியும். சில கறுப்பு ஆடுகள் திமுக-விற்கு துணை போகிறார்கள். ஆனால் அவர்கள் முயற்சி பலிக்காது என்று பேசினார்.

Categories

Tech |